திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவை தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அரசுத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தொட்டம்பட்டி ஊராட்சி, ஆமந்தகடவு ஊராட்சி, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 21 அம்மா மினி கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கடலூரில் அம்மா மினி கிளினிக் திட்டம்: குத்துவிளக்கேற்றி அமைச்சர் தொடக்கி வைப்பு!