திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதி மாவட்ட எல்லை பகுதி என்பதால் மாவட்ட எஸ்பி திசா மிட்டல் உத்தரவின் பேரில், மடத்துக்குளம் காவல்துறையினர் குற்றத் தடுப்பு செயல்களை தடுக்க இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது வழக்கம்போல் வங்கி ஏடிஎம் மையங்களில் சோதனை செய்ய சென்ற தலைமை காவலர் ராஜேந்திரன், ஏடிஎம் மெஷினில் யாரோ தவறவிட்டுச் சென்ற ரூபாய் 4 ஆயிரம் பணம் இருப்பதைக் கண்டு அதை பத்திரமாக எடுத்து உதவி ஆய்வாளரிடம் கொடுத்ததோடு, காவல் ஆய்வாளர் ராஜ் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை தொடர்புகொண்டு விசாரித்ததில், வயலூரில் பணிபுரியும் கூலித்தொழிலாளி பணத்தை தவறவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு அவரை வரவழைத்து, உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, காவல் ஆய்வாளர் ராஜ் கண்ணன் ரூபாய் 4 ஆயிரத்தை கூலித்தொழிலாளியிடம் ஒப்படைத்தார். சிறப்பாக பணியாற்றிய தலைமைக் காவலர் ராஜேந்திரனையும் பாராட்டினார்.
இதையும் படிங்க:
இரண்டாவது காலாண்டில் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாபம் 5 சதவீதம் உயர்வு!