திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் அப்பகுதியில் கடந்த 13 வருடங்களாக ஏலச் சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகள் என பலவிதமான சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.
இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவரிடம் பணம் கொடுத்து பல சீட்டுக்களை போட்டுள்ளனர்.
இந்நிலையில், தவணைத் தொகைகளை சரியாக செலுத்தி வந்த சூழ்நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலமாகியும் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பின் திடீரென வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சுமார் 2000 பேர் வரை சீட்டு சேர்ந்துள்ளதாகவும், 2 கோடி வரை மோசடி நடந்து இருக்கும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உரிமையாளர்போல் உள்ளே நுழைந்து 11 பவுன் நகை, பணம் திருட்டு!