ETV Bharat / state

ஏலச்சீட்டு விவகாரத்தில் மாமன் மகனை கொலை செய்த இளைஞர்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன? - police case

ஏலச்சீட்டு விவகாரத்தில் மாமன் மகனையே இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 4, 2023, 2:21 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெயபிரகாஷ் (20) பெரியவரிகம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயபிரகாஷ், அதே பகுதியில் உள்ள அவர்களது தொழுவத்திற்குச் சென்றுள்ளார். மாட்டிற்கு உணவு வைக்கச் சென்ற அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய புதுச்சேரி மக்களை மீட்க அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

இதனை அடுத்து சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, உமராபாத் காவல்நிலைய போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் ஜெயபிரகாஷின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே உடலைத் தருவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. அரசு மருத்துவரின் அலட்சியம் என பெற்றோர் புகார்!

தொடர்ந்து அவர்களிடம் குற்றவாளிகள் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதியளித்துள்ளனர். இதனை அடுத்து ஜெயபிரகாஷின் உடலை உறவினர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து ஜெயபிரகாஷின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உறவினரான ராஜ்குமார் என்பவரின் மகன் மாணிக்கம் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில், ஜெயபிரகஷிற்க்கும், தனக்கும் ஏலச்சீட்டு பணம் கட்டுவதில் ஏற்கனவே தகராறு இருந்ததாகவும், இதனால் ஜெயபிரகாஷை கத்தியால் குத்தி விட்டு தனது தந்தை ராஜ்குமாரின் உதவியுடன் அங்கிருந்து தப்பியோடியதாகவும் மாணிக்கம் காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காளையார் கோயில் பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல், குறியீடுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.