ETV Bharat / state

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் சடலம் - கைதானவரின் பரபரப்பு வாக்குமூலம்! - womens body recovered from the well issue one arrested

திருப்பத்தூரில் கிணற்றிலிருந்து இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் சடலம் - கைதானவரின் பரபரப்பு வாக்குமூலம்!

author img

By

Published : Aug 8, 2022, 8:08 AM IST

திருப்பத்தூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செல்ரப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் விவேகானந்தன் (55) என்பவருக்கு சொந்தமான பாசன கிணற்றிலிருந்து, அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

இதனையடுத்து கந்திலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பை வைத்து விசாரணை மேற்கொண்டதில், செல்ரப்பட்டியைச் சேர்ந்த ஒருவரின் மகள் என்பது தெரிய வந்தது.

அதேநேரம் “கடந்த ஜூன் 22 அன்று, எங்களது மகள் காணவில்லை. எனவே எனது மகள் அவருடைய காதலனுடன் சென்று விட்டதாக நினைத்தோம். ஆனால் கடந்த ஜூலை 23ஆம் தேதி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கைதான மகேந்திரன்
கைதான மகேந்திரன்

இதனைத்தொடர்ந்து பெண்ணின் அலைபேசி எண்ணை வேறொரு நபர் உபயோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், செல்லரப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் போனை தம்மிடம் விலைக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கந்திலி காவல்துறையினர், செல்லரப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் மகேந்திரன் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாத்தாவான சீனன், என்னை அடித்ததன் காரணமாக தற்போது அவரை பழி வாங்கினேன். அதுமட்டுமின்றி எனது இருசக்கர வாகனத்தில் அவளை அமரச் சொல்லி வற்புறுத்தினேன். இதனால் என்னை அவள் எனது கன்னத்தில் அறைந்தார். உடனடியாக நான் ஆத்திரமடைந்து அவளது கழுத்தை நெரித்து கிணற்றில் தள்ளிக் கொலை செய்தேன்” என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

உயிரிழந்த பெண்ணின் தங்கை பேட்டி

மேலும் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், “நான்கு வருடங்களுக்கு முன்பு எனது மகள் துவைத்து போட்ட உள்ளாடைகளை திருடிச் சென்றதை அறிந்து அவளின் தாத்தாவான சீனன், மகேந்திரனை அடித்ததன் காரணமாகவே இந்த கொலையை மகேந்திரன் செய்துள்ளார்” என தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்திலி காவல்துறையினர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சுசீந்திரம் அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.