திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கவுக்காம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40) தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாணியம்பாடி அடுத்த திம்மனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (25) மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சுரேஷின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சுரேஷ் மனைவி மயூரி அணிந்திருந்த செயினை பறிக்க முற்படும்போது சுதாரித்துக்கொண்ட அவர் பிரசாந்தை கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் பொதுமக்கள் ஒன்றுகூடி பிரசாந்தை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாட்றம்பள்ளி காவல் துறையினர் பிரசாந்தை கைது செய்தனர். மேலும் அவரது நண்பர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பதுங்கிய சிறுத்தை சிக்குமா ? சிறுத்தையிடம் பலிக்குமா வனத்துறையினர் திட்டம்...