ETV Bharat / state

திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு: கணவனை நாட்டுத்துப்பாக்கியால் போட்டுத்தள்ளிய மனைவி! - thirupathur today news

திருப்பத்தூர்: திருமண பந்தத்தைத் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை சுட்டுக்கொன்ற மனைவி, அவருடன் உறவிலிருந்தவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

wife-arrested-for-shoot-and-killed-husband

author img

By

Published : Jun 19, 2020, 11:51 AM IST

Updated : Jun 19, 2020, 12:30 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி-பச்சூர் சாலையில் ஜூன் 4ஆம் தேதி இரவு 53 வயதுடைய ஒருவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சையில் அவர் நாட்டுத்துப்பாக்கியால் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடம்பிலிருந்து குண்டுத் துகள்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அவர் ஜூன் 18ஆம் தேதி உயிரிழந்தார்.

இதற்கிடையில் காவல் துறையினரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தோதன் குட்டைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (53), அவருடைய மனைவி காஞ்சனா (38). அவர்களுக்கு திருமணமாகி நான்கு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சனாவிற்கும் சின்ன மூக்கனூர்ப் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்துவந்துள்ளது. அதனால் கோவிந்தராஜ் இருவரையும் அடிக்கடி கண்டித்துவந்துள்ளார். அதில் ஆந்திரமடைந்த இருவரும் கோவிந்தராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

அதன்படி, அவர்கள் ஜூன் 4ஆம் தேதி இரவு நாட்றம்பள்ளி-பச்சூர் சாலையில் கோவிந்தராஜை நாட்டுத்துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த வீராசாமி என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் - பெண் குத்திக் கொலை

Last Updated : Jun 19, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.