ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நகை, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை

வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை தீவிரம் - திருப்பத்தூரில் நகை பணம் பறிமுதல்

author img

By

Published : Jan 29, 2022, 12:41 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செண்ணாம்பேட்டையை சேர்ந்தவர் கணேஷ். இவர் இன்று காலை குடியாத்தம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் 18 சவரன் தங்க நகைகள் எடுத்து சென்றுள்ளார்.

அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள், வாணியம்பாடி பஜாரில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதே போல் ஆம்பூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த சத்தியமூர்த்தி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அப்பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தாம்பரம் மாநகராட்சியில் 7 பறக்கும் படைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.