திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு அடுத்த ஜொல்லங்குட்டை பகுதியில், பாப்பனூர் மேட்டிலிருந்து வேப்பமரத்து வட்டத்திற்குச் செல்வதற்காக மண்சாலை உள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பாப்பனூர் மக்களில் சிலர், தங்கள் நிலத்தின் வழியே இச்சாலையை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வேப்பமரத்து வட்டத்தில் நீர்த்தேக்க தோட்டி அமைப்பதற்காக கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் மண்சாலையில் சென்றுள்ளது.
சாலையை ஓட்டியுள்ள நிலத்தின் உரிமையாளர்களான சிவசண்முகம், ராமன், குமார், மோகன் போன்றோர் கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சாலையை ஒட்டி பெரிய கிணறு இருப்பதாலும், அந்த கிணற்றைச் சுற்றி போதிய தடுப்புச் சுவர் இல்லாததல் விபத்து ஏற்படும் என்று கருதி கனரக வாகனத்தை இவர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சாலையை இவர்கள் பயன்படுத்தவிடாமல் தடுக்கிறார்கள் எனப் புரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுன் போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் அடாவடியாக பணம் வசூல் செய்யும் காவலர் - வைரல் காணொலி