தருமபுரி காவல் நிலையத்தில் நில அபகரிப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் நாகமையன். இவர் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில்தனது உறவினரின் நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் கார் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் நாகமையன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவலர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் திம்மாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தில் லாரி மோதி விபத்து - அரசு அலுவலர்கள் 8 பேர் படுகாயம்