திருவிழாவிற்கு கோயில் அறக்காவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த போட்டியில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் அதிவேகமாக ஓடிய நாற்பதுக்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற ஒவ்வொரு காளைக்கும் இரண்டு சுற்றுகள் விடப்பட்டது. அதில் அதிவேகமாக ஓடிய 25 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் இரண்டாவது பரிசாக ரூபாய் 40 ஆயிரம் மூன்றாவது பரிசாக ரூபாய் 30 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த காளைகள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளது. அனைத்து காளைகளுக்கும் போட்டி தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவரை கொண்டு அனைத்து கால்நடைகளும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் பின்னர்தான் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
அனைத்து காளைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு முத்திரையிடப்பட்டு பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து காளைகளும் பங்கேற்க செய்யப்பட்டது.
போட்டியில் பங்கேற்று காயமடைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிஏஏ எதிர்ப்பு: மோடி, ஷா உருவப்படத்தை கிழித்தெறிந்த மாணவர்கள்