திருப்பத்தூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலம் தொப்ளா மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. மோட்டூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் சிறு வயதில் இருந்தே வளர்ந்து வந்த லதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது.
இந்த பழக்கம் நாளவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் அசோக் குமார், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். காதல் ஜோடிகளாக ஊர் ஊராக சுற்றி, ஒன்றாக இருந்துவந்த அசோக் குமார் தற்பொழுது லதாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
திருமணம் குறித்து லதா கேட்டால் அசோக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என காரணம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த லதா, இது தொடர்பான அனைத்து தகவலையும் தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், காட்பாடியை அடுத்த திருவலம் காவல்நிலையத்தில் இது குறித்து லதா புகார் அளித்தார். இந்த புகார் குறித்து அறிந்த அசோக்குமார் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இளைஞர் அசோக்குமாரின் உறவினர் ஒருவர் சென்னையில் காவல் ஆய்வாளராக உள்ளதால் அவருடைய அழுத்தத்தின் காரணமாக திருவலம் காவல் நிலைய அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்துவருவநாக பாதிக்கப்பட்ட லதாவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு நியாயத்தை வழங்காமல் காவலர்கள் மெத்தனப் போக்குடன் இருப்பது கண்டிக்கத்தக்கது என பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, அசோக்குமாரை தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி லதா தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.