ETV Bharat / state

பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக், தனியார் பார்களை அகற்றக்கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில், பள்ளிகளுக்கு அருகிலுள்ள மாணவ மாணவிகளுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபானக்கடை மற்றும் தனியார் பார்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

author img

By

Published : Mar 1, 2023, 8:54 PM IST

நாட்டறம்பள்ளி
நாட்டறம்பள்ளி
டாஸ்மாக், தனியார் பார்களை அகற்ற கவுன்சிலர் குருசேவ் கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளின் அருகே 200 மீட்டர் தொலைவில் அரசு மதுபானக்கடையும், உரிய அனுமதி இல்லாமல் பார்களும் உள்ளன.

இந்த பார்களில் 24 மணி நேரமும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசின் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கடை மற்றும் பார்கள் உள்ள பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இதனால் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த மதுக்கடை மற்றும் பார்களை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று(மார்ச்.1) அரசின் மதுக்கடை மற்றும் தனியார் பார்களை முற்றுகையிட்டனர்.

மாணவ மாணவிகளின் நலன் கருதி, நாட்றம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அரசு மதுபான கடை மற்றும் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி இயங்கி வரும் பார்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி முடிவு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.