திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.18) காலை முதல் தற்போது வரை கனமழை பெய்துவருவதால், ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பாங்கிசாப் பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று (நவ.19) திடீரென மழை நீர் புகுந்தது.
உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் அலுவலர்கள் ஒருவம் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தீயணைப்புத் துறையினர் படகின் மூலம் குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: வெங்கச்சேரி செய்யாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து நிறுத்தம்