ETV Bharat / state

இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் விசாரணை - பைக் திருட்டு

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவரை கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இருசக்கர வாகனம் திருடும் காட்சி
இருசக்கர வாகனம் திருடும் காட்சி
author img

By

Published : Nov 18, 2021, 9:44 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் தக்காளி வியாபாரம் முடித்துவிட்டு வாணியம்பாடி பெரியபேட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனம் திருடும் காட்சி

இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை லாவகமாகத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்தக் காட்சி அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து இஸ்மாயில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வாகனத்தை திருடியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: Aavadi Auto theft CCTV: ஆவடியில் ஆட்டோ திருட்டு: திருடர்களின் முகம் காட்டிய மூன்றாம் கண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.