திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச்சேர்ந்தவர், முருகானந்தம். ஆம்பூரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் இவர் தினமும் இரவு தனது இருசக்கர வாகனத்தை பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே நிறுத்துவது வழக்கம்.
நேற்றிரவு (நவ.19) வழக்கம்போல் தனது வீட்டின் வெளியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். இன்று (நவ.20) காலை வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உடனடியாக தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து முருகானந்தம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக்கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் கடையில் கஞ்சா ஆசாமி ரகளை - வைரலாகும் வீடியோ!