திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும், இவர் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வருவதாக கூறுவிட்டு புறப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, யாரேனும் இவரை அடித்துக்கொலை செய்துவிட்டு பாலத்தின் கீழ் உடலை வீசி சென்றனரா ? அல்லது மது போதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் இறந்தாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.