ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி கொள்ளை!

திருப்பத்தூர்: கந்திலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகிவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

theft
theft
author img

By

Published : Aug 1, 2020, 7:08 PM IST

திருப்பத்தூர் கந்திலியை அடுத்த மானவள்ளி பகுதியில் வசித்துவருபவர் ராஜேந்திரன் (55). இவர் சலூன் கடை நடத்திவருகின்றார். இவரது மகன் ராமச்சந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகனைப் பார்க்க ராஜேந்திரன் தன்னுடைய மருமகள் ஜெயபிரதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ராஜேந்திரனின் மனைவி கஸ்தூரியும் அருகிலுள்ள நிலத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் கஸ்தூரி திரும்பிவந்து பார்க்கும்போது, வீடு திறக்கப்பட்டுள்ளதைக் கண்டு பதற்றமடைந்தார். உள்ளே சென்று பார்க்கையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கந்திலி காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த காவல் துறையினர், வழக்குப் பதிந்து கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.