திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட கடையில் காவல் துறையினர் மற்றும் வாணியம்பாடி நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் கடையின் உரிமையாளரான ஜியாவுல்லா கான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க:'1500 கோடி' அபேஸ்... 10 லட்சம் பேரிடம் பணத்தைச் சுருட்டிய எம்எல்எம் கும்பல்!