ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும், கரோனா தொற்று காரணமாக சரியான முறையில் உடல்நிலையை கவனிப்பதற்கும் பரோல் வழங்க வேண்டி அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அவருக்கு புழல் சிறையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.
இதனையடுத்து, இன்று (மே.28) காலை புழல் சிறையிலிருந்த பேரறிவாளன், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையில், பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனின் வீட்டில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான 30க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இதுவரை எத்தனை முறை பரோலில் வந்துள்ளார் பேரறிவாளன்?