ETV Bharat / state

புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையிலுள்ள புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புல்லூர் தடுப்பணை
புல்லூர் தடுப்பணை
author img

By

Published : Nov 9, 2021, 10:10 AM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தடுப்பணை, ஏரி, கால்வாய்கள் மழை நீர் நிரம்பி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளிலும், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாலாற்றின் குறுக்கே பொகிலிரேவ் கங்குந்தி, நூல்குண்டா உள்ளிட்ட 29 இடங்களில் ஆந்திரா அரசு கட்டியுள்ள அனைத்து தடுப்னைகளும் நிரம்பி வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் வாணியம்பாடி சுற்றியுள்ள அம்பலூர், உதயேந்திரம், மேட்டுப்பாளையம், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றங்கரையோர மக்களுக்கு பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வருவாய்துறை சார்பில வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நீர் நிரம்பி காணப்படுவதால் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நன்மங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் - தீவு போல் காட்சி அளிக்கும் ஊராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.