திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின்நிலையத்தில் மின்கட்டணத்திற்குரிய ரசீது வழக்காமல் ரூ.11,000 கையாடல் செய்த மின் ஊழியரை வாணியாம்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கேத்தாண்டபட்டி துணை மின்நிலையத்தில் மின்கட்டணம் வசூலிக்கும் பிரிவில் பணியாற்றுபவர் வெங்கடேசன்.
இவரிடம் காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த வந்தபோது கணினியில் தொழிற்நுட்ப கோளாறு என்று கூறி மின்கட்டணம் செலுத்திய ரசீதை பொதுமக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து காவேரிப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் மின்கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு மின் இணைப்பை துண்டிக்க சென்றனர்.
அப்போதுதான் பொதுமக்களுக்கு ரசீது வழங்காமல் பணம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் வாணியாம்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் பாஷா முகமதுவிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வெங்கடேசன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ‘வெள்ள பாதிப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி