திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சைப் பலனின்றி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 42,940 பேருக்கு அம்மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாயிரத்து 83 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.