திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் துண்டு பிரசுரத்தை பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (ஜூலை 16) காலை முதல் வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை, முகமது அலி பஜார், மற்றும் பல முக்கிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.
இதேபோல், அன்று மாலை வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான பஷீராபாத் பகுதியில் துண்டு பிரசுரங்களை பாஜகவினர் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து துண்டு பிரசுரங்களை வழங்கிய பாஜகவினரை கற்களை கொண்டு விரட்டினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் எற்ப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் பாஜகவினரை பாதுகாப்பாக மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
இதனை அடுத்து பாஜக சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தனர். மேலும் இந்நிகழ்வு குறித்து பாஜக சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்று அதாவது நேற்று ( ஜூலை 16) காலை முதல் வாணியம்பாடியில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம்.
இதையும் படிங்க: பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த வழக்கு... ராஜஸ்தானில் ஒருவர் கைது!
அதை தொடர்ந்து மாலை வேளையில் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கிகொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த தமமுக, எஸ்டிபிஐ போன்ற சமூகத்தில் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பயங்கரவதத்தையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் 50க்கும் மேற்பட்டோர் எங்களை தாக்க முற்பட்டு கோஷங்களை எழுப்பி மிகப்பெரிய அளவில் வன்முறையை துண்டும் வகையில் அங்கு பிரச்சினையில் ஈடுப்பட்டனர்.
அதன் பின் தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தினர். மேலும், திமுகவினர் இரண்டாண்டு ஆட்சியில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை ஸ்டாலின் தவறாக பயன்படுத்தி வருகிறார்.
டிவிட்டரில் பாஜவினர் எதேனும் தவறுதலாக பதிவிட்டால் உடனடியாக கைது செய்யும் காவல்துறையினர். தக்க ஆதரத்துடன் புகார் அளித்தால் மட்டும் அதை மறுபரிசீலனை செய்யாமல் கால தாமதம் ஆக்குவது காவல்துறையை முதலமைச்சர் தன் கைப்பிடியில் வைத்திருப்பது தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: தொழு நோயாளிகளின் தோழன் - 21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மணிமாறன்!