ETV Bharat / state

"தப்பு பண்ணா திருத்த வழி பண்ணனும்; பயப்படக் கூடாது" - பெண்ணுக்கு அறிவுரை கூறிய அரசு ஊழியர் ஆடியோ!

"தப்பு பண்ணா அத திருத்துவதற்கு வழி நம்ம பண்ணனும் பயப்படகூடாது" வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற பணத்தை எடுத்து கொண்டு அதை மறைக்க பெண்ணுடன் சேர்ந்து திட்டம் போடும் ஊராட்சி செயலாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி
வாணியம்பாடி பரபரப்பு ஆடியோ!
author img

By

Published : Feb 17, 2023, 9:22 AM IST

"தப்பு பண்ணா திருத்த வழி பண்ணனும்.. பயப்படக் கூடாது": பரபரப்பு ஆடியோ!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ். இவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அமீர் பாஷா, ஊராட்சி பணம் 10 ஆயிரத்தை அலுவலக வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார்.

இதை பெற்றுக் கொண்ட கோவிந்தராஜ் அதில் ஒன்பது ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அதே ஊராட்சியில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் 1000 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து விடுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பெண் வங்கிக்குச் சென்று ரூ.1000 செலுத்தி விட்டு அதற்கான ரசீதை கோவிந்தராஜிடம் கொடுத்த போது, அவர் அந்த ரசீதில் 1000 ரூபாய் ஆக இருந்ததைப் பத்தாயிரம் ரூபாயாக மாற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்துள்ளார். பின் அதில் சந்தேகம் அடைந்த தலைவர் வங்கிக்குச் சென்று விசாரித்த போது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்குத் தெரிந்து விட்டது என்பதற்காக உடனடியாக ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் பணம் கொடுத்து அனுப்பிய பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஆடியோவில், "வங்கியில் என்னைப் பார்த்து விட்டார்கள் அதனால் என்ன செய்வது தெரியவில்லை. உன்னைத் திட்டுவது போல் திட்டுகிறேன், வேறு வழியில்ல. தப்பு பண்ணா அதை திருத்துவதற்கு வழி நம்ம பண்ணனும் பயப்படகூடாது. பணத்தை கேட்டால் வட்டி கட்ட முடியவில்லை என ஏதேனும் காரணம் கூறு என கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் பெயர் கெட்டுவிடும் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வங்கியில் இதுகுறித்து தலைவர் விசாரித்தார்களா என விசாரிக்கிறேன்" என பேசியுள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அமீர் பாஷா இடம் கேட்டபோது, "10000 ரூபாய் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து வர சொன்ன போது, அதை செய்யாமல் அவர் கையாடல் செய்தது உண்மைதான். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த தகவலை நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்" என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரிடம் கேட்டபோது, "அவர் இதற்குப் பதில் கூறாமல். அலுவலகத்தில் விசாரணையிலிருந்த ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜிடம் செல்போனை கொடுத்து விட்டார். அதைப் பெற்றுக் கொண்டு நம்மிடம் பேசிய கோவிந்தராஜ், என் மீது கால்ப்புணர்ச்சியால் இதைச் செய்கிறார்கள் நான் அது போன்று பேசவில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறுப்பின்றி சீக்கிரமாக மூடப்பட்ட டாஸ்மாக் - கொந்தளித்த மதுப்பிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.