திருப்பத்தூர்: மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய 5 வது வீதியில் வசித்து வருபவர் சோனா டார்ஜிலிங். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆம்பூர் ஓ ஆர் தியேட்டர் அருகில் உள்ள பேக்கரி கடையில் நேற்று இரவு 4 ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து பள்ளி முடித்து வந்த அவரது பிள்ளைகளுக்கு டீ மற்றும் ரொட்டி சாப்பிட கொடுத்த போது ரொட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
ஆம்பூர் நகரப் பகுதியில் உள்ள கடைகளில் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சுமார் ரூ.8 கோடி மோசடி - தனியார் நிதி நிறுவன இயக்குனர் கைது