ETV Bharat / state

வயலில் பிடிபட்ட 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு - python Caught

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வயலில் பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத் துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

ஆம்பூரில் பிடிபட்ட 7 அடி மலைப்பாம்பு  7 அடி மலைப்பாம்பு  மலைப்பாம்பு  7-feet python  python Caught  7-feet python caught in Ambur
7-feet python caught in Ambur
author img

By

Published : Apr 15, 2021, 6:33 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் மூர்த்தி என்பதற்குச் சொந்தமான வயலில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத் துறையினர் வயலில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

மலைப்பாம்பை லாவகமாகப் பிடிக்கும் வனத் துறையினர்

பின்னர் பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கொண்டுசென்று ஆம்பூர் காப்புக்காடு பகுதிகளில் பாம்பை பத்திரமாக விட்டனர். முன்னதாக ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் உள்ள வேளாண் நிலத்துக்குள் புகுந்து கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பயிர்களை நாசம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோட்டத்தில் சிக்கிய 8அடி நீள மலைப்பாம்பு- பீதியில் பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.