தூத்துக்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 16 வார்டுகளில் திமுக வேட்பாளரும், ஒரே ஒரு வார்டில் அதிமுக வேட்பாளரும் வெற்றிபெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் திமுக வசம் என்றானது. இருப்பினும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பாசங்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கோவில்மணி என்பவர் தேர்வானார்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு;
1. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் - வசுமதி அம்பாசங்கர்(திமுக), துணைத் தலைவர் கோவில்மணி(திமுக).
2. ஓட்டப்பிடாரம் ஒன்றியத் தலைவர் - ரமேஷ்(திமுக), துணைத் தலைவர் - காசி விஸ்வநாதன்(திமுக)
3. கருங்குளம் ஒன்றியத் தலைவர் - கோமதி(அதிமுக), துணைத் தலைவர் லெட்சுமணப்பெருமாள்(அதிமுக)
4. ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் - ஜனகர்(திமுக), துணைத் தலைவர் - ராசாத்தி(திமுக)
5. விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் - முனியசக்தி(அதிமுக), துணைத் தலைவர் - சுப்புலட்சுமி(பாஜக).
6. ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் - வசந்தா(அதிமுக), துணைத் தலைவர் - விஜயன்(அதிமுக)
7. புதூர் ஒன்றியத் தலைவர் - சுசீலா(அதிமுக), துணைத் தலைவர் - திருச்செல்வி(அதிமுக).
8. திருச்செந்தார் ஒன்றியத் தலைவர் - செல்வி(அதிமுக), துணைத் தலைவர் - ரெஜீபட் பர்னாந்து(அதிமுக)
9. கயத்தார் ஒன்றியத் தலைவர் - மாணிக்க ராஜா(அமமுக), துணைத் தலைவர் - மீரா(அமமுக)
10. உடன்குடி ஒன்றியத் தலைவர் - பாலசிங்(திமுக), துணைத் தலைவர் - மீரா(திமுக)
11. சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் - ஜெயபதி(அதிமுக), துணைத் தலைவர் - அப்பாத்துரை.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுக தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.