ETV Bharat / state

புதிய சாதனைப் படைத்த தூத்துக்குடி வஉசி துறைமுகம்! - VOC port

தூத்துக்குடி: 24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய சாதனைப் படைத்த தூத்துக்குடி வஉசி துறைமுகம்!

author img

By

Published : Oct 29, 2020, 2:45 PM IST

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளம் ஒன்பதில் கடந்த 27ஆம் தேதி எம்.வி. ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஓசன் டீரீம் என்ற கப்பலிலிருந்து 56 ஆயிரத்து 687 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தச் சாதனையானது, இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி எம்.வி.மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 24மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 55,785 டன் நிலக்கரியை விட அதிகமாகும்.

எம்.வி. ஓசன் டீரீம் கப்பல் இந்தோனேசியா நாட்டிலுள்ள அதாங் பே என்ற துறைமுகத்திலிருந்து 77,535 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது.

இக்கப்பலில் வந்த 77,535 டன் நிலக்கரியும் இந்தியா கோக் அன் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் பாராட்டுகளை தெரிவித்தார்.

இதையும் படிங்க...வவ்வால்களுக்கு சரணாலயம் அமைத்து பாதுகாக்கும் கிராம மக்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.