இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்துப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 17யு பதிவேட்டில் வாக்காளர்களின் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் இருந்தால் உடனடியாக பொதுப் பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 257 வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.