ETV Bharat / state

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்: பனிமய மாதா திருவிழாவிற்காக சிறப்பு ரயில்கள் ; மீன் விலை ‘கிடுகிடு’

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா வருகின்ற ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மக்கள் பயன்பெறும் பொருட்டு, தெற்கு ரயில்வே, 2 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.

thoothukudi-panimaya-matha-temple-festival-southern-railway-notice-to-run-special-trains
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவிற்காக சிறப்பு ரயில்கள் ; மீன் விலை ‘கிடுகிடு’
author img

By

Published : Jul 1, 2023, 1:14 PM IST

தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா, வருகின்ற ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தங்கத்தேர் வீதி உலா நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்கேற்ப, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு, கனிமொழி கடிதம் எழுதி இருந்தார். இதனைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் 2 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த சிறப்பு ரயில் (06005) 3.8.2023 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. அதே போன்று மறுமார்க்கத்தில் 4.8.2023 அன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

மேலும், விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மீண்டும் சென்னைக்கு செல்வதற்கு வசதியாக 5.8.2023-ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், 6.8.2023-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வரத்து குறைவால், மீன்களின் விலை ‘கிடு கிடு’

தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக, நாட்டுப்படகுகள் அதிக அளவில் கடலுக்குச் செல்லவில்லை. இதன்காரணமாக, மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கணிசமான அளவிற்கு அதிகரித்து உள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் தங்கி, கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை... குறைவான நாட்டுப் படகுகளே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளன. இந்த மீனவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை கரைக்குத் திரும்புவர், அதன்படி, இன்று குறைவான படகுகளே கரை திரும்பின. இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்திற்கு குறைவான மீன்களே ஏலத்திற்கு வந்தன.

இதன் காரணமாக, கடந்த வாரம் குறையத் தொடங்கிய மீன்களின் விலை மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. சீலா மீன் கிலோ 1,200, விலா மீன் மற்றும் ஊளி மீன் கிலோ 400 ரூபாய், பாறை கிலோ 300 ரூபாய், நண்டு கிலோ 250 ரூபாய், சாலை ஒரு கூடை ரூபாய் 2,400, கண்ணாடி பாறை கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது. சனிக்கிழமை என்பதால் அசைவப் பிரியர்கள் விலையையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட தக்காளி விலை: கிலோ ரூ.110-க்கு விற்பனை... காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.