ETV Bharat / state

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் களைகட்டிய மலர்க் காவடி திருவிழா! - மயில் காவடி

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோயிலில் பக்தர்கள் மலர்க் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில் மலர் காவடி திருவிழா

author img

By

Published : Dec 25, 2022, 8:07 PM IST

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் களைகட்டிய மலர்க் காவடி திருவிழா!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் பிரசித்திபெற்ற குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் 'தென்பழநி' என அழைக்கப்படும் இக்கோயில் ஆண்டுதோறும் உலக மக்களின் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் எனவும் 'மலர்க்காவடி எடுத்து வழிபாடும் விழா' கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு மலர்க்காவடி விழா இன்று தொடங்கியது.

இதையொட்டி இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் காவடி மேள தாளங்கள் முழங்க மயில் காவடி ஆட்டம் நடைபெற்றது. மயில் காவடி ஆட்டத்துடன் நடைபெற்ற விழாவில் சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், தமிழ்நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமை ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட முக்கிய ஆதீனங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கி மலர்க்காவடி ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர்.

குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் மலர்க்காவடி எடுத்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கழுகாசலமூர்த்தி கோயில் கிரிவலப்பாதை வழியாக ’அரோஹரா’ என முழக்கம் எழுப்பியும், முருகன் துதி பாடியும் மலர்க் காவடி எடுத்து ஊர்வலமாக சுற்றி வந்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதையும் படிங்க: 'துணிவு' வெற்றி பெற சபரிமலையில் பேனர் வைத்து ரசிகர்கள் வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.