ETV Bharat / state

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.13 லட்சம் மீட்பு - உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்! - case registration

Thoothukudi Cyber Crime Police: தூத்துக்குடியில் ஆன்லைன் மூலமாக ஏமாற்றப்பட்ட பணத்தில் ரூபாய் 13,36,530யை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். இந்த பணத்தை இணையத்தளம் மூலம் ஏமாற்றப்பட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 8:40 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி, ராஜீவ்நகரை சேர்ந்தவர் மாரியப்பசாமி இவரது மனைவி ரேகா, இவரது செல்போனில் டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலை வாய்ப்பு சம்பந்தமாகச் செய்தி வந்ததாகவும், அதன் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் தொடர்பு கெண்டு இணையதளத்தில் Product Rating கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதை நம்பி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 14,12,849/- பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக ரேகா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த செலஸ்டன் மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்யுமாறு கூறியதை நம்பி ரூபாய் 36,98,800/- பணத்தைத் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி பனிமய கிளாட்வின் மனோஜ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி ரஹமத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் காபர் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறியதை நம்பி ரூபாய் 1 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அப்துல் காபர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இது போன்ற சைபர் குற்றச் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றம் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய் 13,36,530/- பணம் திரும்பப் பெறப்பட்டு மீட்கப்பட்டது.

மேற்படி, மீட்கப்பட்ட ரூபாய் 13,36,530/- பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் மாவட்ட காவல்துறை கூட்ட அரங்கில் வைத்து மேற்படி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் கூறும் போது, "செல்போன்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிகழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும், வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிராதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைத்தளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்றும், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வட்டி மூலம் அதிகப் பணம் பெறலாம் என்றும் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அதேபோன்று தனியார் ஹோட்டல்கள், நிறுவனங்களுக்கு அதிக ரேட்டிங் கொடுத்து அதற்குப் பதிலாக அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி லிங்க்குகளை கிளிக் செய்வதன் மூலம் நமது பணம் மோசடி செய்யப்படும் என்றும். மேலும், OTP மூலம் மோசடியாகப் பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளைத் தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ, வேறு வகையிலோ பண இழப்பு ஏற்பட்டால் பொது மக்கள் 24 மணி நேரத்தில் சைபர் குற்றப் பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைப்பேசி எண்ணான 1930ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் 28 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 46 லட்சம் பணம் நீதிமன்றம் மூலமாக முடக்கம் (Freeze) செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. களத்தில் 800 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.