தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆறு கோயில்களில் வைணவம் மற்றும் சைவ முறைப்படி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி இன்று தொடங்கியது.
இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆகிய கோயில்களில் வைணவ முறைப்படியும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய நான்கு கோயில்களில் சைவ முறைப்படி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி இன்று தொடங்கியது.
திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மண்டல இணை ஆணையர் அன்புமணி, நகராட்சி தலைவர் சிவஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டு அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயில இருக்கும் 11 மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் மாத உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இதையும் படிங்க:விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு...