ETV Bharat / state

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ-வின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! - தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட

மணல் கடத்தலைத் தடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸின் உடல் உடற்கூராய்வுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 26, 2023, 4:03 PM IST

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ-வின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று (ஏப்.26) நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் நேற்று (ஏப்.25) பிற்பகலில் இரண்டு மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து பணியில் இருந்தபோது, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் பணியில் மிகவும் நேர்மையானவர், தைரியமானவர். அதே நேரத்தில் அரசு சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணியை நேர்த்தியாக செய்து வந்தவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கடத்தல் விவகாரங்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: "நேர்மையான விஏஓ லூர்து பிரான்சிஸை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்" - கலெக்டர்

எனவே, மணல் கடத்தல் காரணமாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ராமசுப்பு மற்றும் மேலும் ஒருவர் சேர்ந்து லூர்து பிரான்சிஸை பட்டப்பகலில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, முதற்கட்டமாக ராமசுப்பு என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். பின்னர், அவரது உடல் திருவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: VAO Murder: விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.