ETV Bharat / state

சங்ககால தமிழி எழுத்துகளை கண்டு வியந்த மாணவர்கள்.. கல்வெட்டுகளை படிக்க ஆர்வம்! - Kamaraj College

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற "தமிழி கல்வெட்டுப் பயிற்சியில்" சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய எழுத்துருக்களைக் கல்லூரி மாணவர்கள் கண்டு வியந்தனர்.

சங்ககால ”தமிழி எழுத்துகள்” படித்தல் பயிற்சி! மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

author img

By

Published : Aug 21, 2023, 11:49 AM IST

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் சங்ககால தமிழ் எழுத்துருக்களை கல்வெட்டுகளின் அச்சுப்படிகளை கொண்டு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கற்பித்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், வரலாற்றுத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த "தமிழி எழுத்துகள்" மற்றும் "கல்வெட்டுகள் படித்தல்" பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறை தலைவர் ஆ. தேவராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜ.பூங்கொடி பயிற்சியை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு, தமிழி கல்வெட்டு எழுத்துகளின் சிறப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.

இதையும் படிங்க: பெருந்துறை சிப்காட் கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய திட்டம்.. ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

இது குறித்து அவர் பேசியதாவது, "தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் பழமைகளை அறிந்து கொள்ள எண்ணற்ற சான்றுகளில் முதன்மையானவை தமிழி எழுத்துச் சான்றுகள். தமிழி எழுத்துகளின் அடையாளங்கள் பானை ஓடுகள், காசுகள், அணிகலன்கள் மற்றும் மலைக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எழுத்தறிவின் தொன்மையைக் காட்ட தமிழி எழுத்துகள் முதன்மையானதாக இருந்தன. உலகின் பெரும்பாலான மொழிகளில் உள்ள வேர்ச் சொற்கள் தமிழ் சொற்களாக இருப்பது தமிழின் தொன்மையை உணர்த்துகிறது. உலகிலேயே மிக பழமையான எழுத்துகளின் ஒன்று தமிழ் எழுத்துகள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் முதன்முதலாக ராபர்ட் சீவல் என்ற ஆங்கிலேயரால், மதுரை மீனாட்சிபுரத்தில், தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. மேலும், தமிழி கல்வெட்டானது வணிகப் பெருவழிகளில் நல்ல விளைச்சல் உள்ள பகுதிகளிலும், முக்கிய நகரங்களைச் சுற்றி அமைந்த குன்றுகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலான தமிழி கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் உள்ளது" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழி எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தரப்பட்டது. காட்சிக்கு வைக்கப்பட்ட மறுகால்தலை, விக்கிரமங்கலம், அழகர்மலை, கொங்கர் புளியங்குளம் உள்ளிட்ட மலைக்குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி கல்வெட்டுகள் படங்கள், அச்சுப்படிகள் மூலம் மாணவர்களுக்கு படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. அப்போழுது ஆங்கிலம், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்துகள் தமிழி போல உள்ளதைக் கண்டு மாணவ, மாணவிகள் வியப்படைந்தனர்.

இதையும் படிங்க: மெரினாவில் மூழ்கிய பள்ளி மாணவன்.. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.