ETV Bharat / state

தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல பிறமொழி கற்றல் அவசியம்: தமிழிசை சவுந்தரராஜன் - பிற மொழி கற்க வேண்டும்

தூத்துக்குடியில் நடந்த பாரதியார் 141-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல பிற மொழிகளை கற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.

தமிழ் மொழியை உலககெங்கும் கொண்டு செல்ல பிற மொழி கற்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

author img

By

Published : Dec 12, 2022, 8:10 AM IST

தமிழ் மொழியை உலககெங்கும் கொண்டு செல்ல பிற மொழி கற்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடி: தாமிரவருணி தமிழ் வனம், மகாகவி பாரதியார் இலக்கிய பேரவை இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் 141வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய மொழிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது,”ஜி 20 மாநாட்டைப் பாரத நாடு தலைமை ஏற்று நடத்துவதன் மூலம் பாரத நாடு உலகிற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கப் போகிறது.

பொருளாதாரத்தில், சுற்றுச்சூழலில் இந்தியா பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். நாடு சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இந்தியத் திருநாடு இன்று தடுப்பூசியைத் தயாரித்து 150 நாடுகளுக்கு வழங்கி உள்ளது” என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், பாரதியார் எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டார். அவர் வழியில் இன்று தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் கவனம் என்று கூறியதைக் குறிப்பிட்ட ஆளுநர் தமிழ் மொழியை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் வேறு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பிற மொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என்றார். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி பாடத்தில் பாடங்கள் கற்பிக்கப்படும் மூன்றாவது மொழியாக இன்னொரு மொழியைக் கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இன்றைய மாணவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை அரசியல் காரணங்களுக்காகத் தட்டிப் பறிக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

பாடத்திட்டங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனக் கூறியவர், இளைஞர்கள் புத்தகங்களை அதிகமாகப் படிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக பாரதியின் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாரதிக்குத் தமிழகத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டவர், புதுச்சேரியில் பாரதி சிலை வைக்க வேண்டும். எங்கெங்கும் காணினும் சக்தி பிறக்குதடா என்று பாடிய பாரதியின் பாடல் கடற்கரை ஓரத்தில் இசைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்தார்.

உலகிற்கே குருவாக இந்தியா விளங்கும் என்று தீர்க்கதரிசனமாக பாரதி கூறியதால் என்று இந்தியா உலக நாடுகளுக்குத் தடுப்பூசியைக் கொடுத்து குருவாக விளங்கியுள்ளது. இந்தியா ஜி 20 மாநாட்டை நடத்துவதன் மூலமாக உலகில் எல்லோரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா கொடுக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இன்று நாட்டில் 75 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பாரத திருநாடு பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் கவச உடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்துள்ளன. மருந்துகள் தயாரிப்பதிலும், தடுப்பூசிகள் தயாரிப்பதிலும், கவச உடைகள் தயாரிப்பதிலும் இந்தியா முன்னிலை வைக்கிறது . பாரதியை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் அவருடைய வீடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பாரதி எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, மகாகவி பாரதியார் இலக்கிய பேரவைத் தலைவர் ஏ. ஆர்.லட்சுமணன், தாமிரவருணி தமிழ் வனம் புரவலர் டாக்டர் அருணாச்சலம் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காரில் தொங்கியபடி பயணம்.. சென்னை மேயர் பிரியாவுக்கு சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.