தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அவர்கள் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவந்த காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவ சேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கிடைத்து வந்தது.
ஆனால், தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் அவை அனைத்தும் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.