ETV Bharat / state

'ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு கற்பனைக் கதையா?' - வலுக்கும் கண்டனங்கள்! - gun shoot

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு கற்பனைக்கதை என்று கூறியதற்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்கவேண்டுமென ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு
author img

By

Published : Jul 22, 2019, 5:35 PM IST

மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த வசந்தி, கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் சமீபத்தில் இது குறித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என்பது கற்பனைக்கதை' என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

முன்னதாக, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்த விவரத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் கூறியதே ஏற்க முடியாத துயரமாக உள்ளது. அப்படி இருக்கையில் துப்பாக்கிச்சூடு குறித்த இவரது கருத்து மிகவும் வருந்தத்தக்கது. ஆகவே முதலமைச்சர் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகும் மக்கள் நலப்பணிகளில் அந்நிறுவனம் ஈடுபடுவதாகக்கூறி லஞ்சம் கொடுத்து வருகிறது. ஆகவே இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி போராடுவோம் என்றார்.

Intro:ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு கற்பனைக்கதை என்றுகூறியதற்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் பேட்டிBody:தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரும் மாவட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் சமீபத்தில் இது குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என்பது கற்பனை கதை என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்த விவரத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று முதல்வர் கூறுவது என்பதே ஏற்க முடியாதது. அப்படி இருக்கையில் துப்பாக்கிச்சூடு நடந்ததை கற்பனைக் கதை என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஆகவே முதல்வர் இவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகும் அது மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதாக கூறி லஞ்சம் கொடுத்து வருகிறது. ஆகவே இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை எனில் அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி நாங்கள் போராடுவோம் என்றார்.

பேட்டி : வசந்திConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.