தூத்துக்குடி: தென்னிந்திய அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
4வது தென்னிந்திய அளவிலான 14 வயதிற்குட்பட்ட ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டி ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டன.
இதையும் படிங்க: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
லீக் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நேற்று (செப் - 17) நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு அணி வீரர்கள் வெகு சிறப்பாக விளையாடி 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கேரளா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி 3 - 0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் சாம்பியன் பட்டம் என்ற அணிகளுக்கும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்கள் பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: “விண்வெளி உலகின் வெற்றி முனையத்தில் இந்தியா”- வி.நாராயணன் பெருமிதம்!