ETV Bharat / state

தூத்துக்குடியில் 1.25 டன் எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல் - 3 பேர் கைது - மூன்று பேர் கைது

தூத்துக்குடி: சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

police
police
author img

By

Published : Aug 13, 2020, 8:37 PM IST

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் காவலர்கள் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சாக்கு மூடைகளுடன் ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பிரித்திவிராஜ்( 22) என்பதும், இதபோன்று, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் மொத்த வியாபாரம் அடிப்படையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி ஓம் சக்தி நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் குடோன் அமைத்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும், குறிஞ்சி நகரைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் கிருஷ்ணராஜா புரத்தை சேர்ந்த சோலையப்பன் ஆகியோருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

பிரித்திவிராஜ் கொடுத்த தகவலின் படி நள்ளிரவில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிஞ்சிநகர், ஓம்சக்தி நகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் 1.25 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மகாராஜன், சோலையப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருள்களை விற்க பயன்படுத்திய 3 கார், ஒரு லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குட்கா கடத்தியவர்கள் கைது
குட்கா கடத்தியவர்கள் கைது

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களின் மொத்த மதிப்பு 17 லட்சத்து 17 ஆயிரத்து 376 ரூபாய் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகின்றன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.