ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதான காவலர் முத்துராஜுக்கு நீதிமன்றக் காவல்! - கான்ஸ்டபிள் முத்துராஜ் கைது

Judicial custody for constable muthuraj
Judicial custody for constable muthuraj
author img

By

Published : Jul 4, 2020, 9:26 AM IST

Updated : Jul 4, 2020, 12:23 PM IST

09:22 July 04

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் குற்றச்சாட்டுக்குள்ளான ஐந்து காவலர்களில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதனிடையே தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 7) இரவு இரவு 9:30 மணியளவில் விளாத்திக்குளம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமலட்சுமி, சிபிசிஐடி காவல் துறையினருடன் இணைந்து குளத்தூர் அருகேயுள்ள அரசன்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் முத்துராஜை கைதுசெய்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து முத்துராஜை மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிபிசிஐடியினர் இன்று (சனிக்கிழமை) காலை அழைத்துச் சென்றனர்.  அதைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.  

அப்போது, முத்துராஜை ஜூலை 16ஆம் தேதி வரை பேரூரணி சிறையில் அடைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். மீண்டும் ஜூலை 17ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர் முருகன் ஆகியோரையும் இதே சிறையில் ஜூலை 16ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

இதையும் படிங்க: காவலர் மகாராஜன் ஆஜரான தகவல் பொய்யானது - ஐஜி சங்கர்

Last Updated : Jul 4, 2020, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.