ETV Bharat / state

திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை அமோகம்

author img

By

Published : Dec 5, 2022, 8:57 PM IST

திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல்விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல்விளக்குகள் அமோக விற்பனை

தூத்துக்குடி: ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இரவில் வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவதும் வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா நாளை (டிச.6 செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபத்துக்கான அகல்விளக்குகளை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

தூத்துக்குடியில் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. விதவிதமான வடிவத்தில் அகல்விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. விளக்குகளில் புதிய வரவான சிம்னி விளக்கு, பூந்தொட்டி விளக்கு, அஷ்ட லெட்சுமி விளக்கு எனப் பல வகையான விளக்குகள் உள்ளன.

இதே போன்று அணையா விளக்கும் அதிகமாக 1 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தண்ணீரில் மிதக்கும் விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக புதிய வடிவத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விளக்குகளை ஏராளமானோர் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை அமோகம்

இது குறித்து அகல் விளக்கு விற்பனையாளர் கருப்பசாமி கூறும்போது; ’மக்கள் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகளை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இந்த விளக்குகளில் இலை, வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகிறோம்.

20-க்கும் மேற்பட்ட பெண்கள் மூலம் வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. 100 வகையான விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம். இதில் வண்ணம் தீட்டப்பட்ட விளக்குகள் இரவு நேரத்தில் கலர் கலராக மின்னுகிறது’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: சபரிமலை கோயிலில் உச்சகட்ட கெடுபிடி - ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.