ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி! மோசடி மன்னன் கைது! - government job issue in Thoothukudi

தூத்துக்குடியில், அரசு வேலைகள் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 16 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரனை
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 12:27 PM IST

தூத்துக்குடி: தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலை மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் திரவியம் மகன் முத்தையா (வயது 30). இவரிடம் சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்த வீரமணி மகன் சுடலைமுத்து (வயது 48) என்பவர் அறிமுகமாகி, தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலை மற்றும் அரசு வேலைகள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அரசு வேலைக்காக முத்தையாவிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்களான தேவராஜ் என்பவரிடம் ரூபாய் 6 லட்சமும், சுயம்பு என்பவரிடம் ரூபாய் 6 லட்சம், சுபாஷ் என்பவரிடம் ரூபாய் 1,50,000 என மொத்தம் ரூபாய் 16 லட்சம் பணத்தை வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொத்துக் குவிப்பு வழக்கு: இறுதி விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இந்நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்ட சுடலைமுத்து, வேலை வாங்கி கொடுக்கமாலும், பணத்தை திருப்பி தராமலும் அவர்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த முத்தையா, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

வழக்கின் அடிப்படையில், மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன் ஜோதி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, ரூபாய் 16 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சுடலைமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து அவரிடம் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொது இடங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.