ETV Bharat / state

ஆட்சியாளார்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட மேலும் உயிர்பலி கேட்கிறார்களா? - protesting against the opening of the Sterlite plant

தூத்துக்குடி: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், ஆலையை மீண்டும் மூட அரசியல் தலைவர்கள் உயிர்பலியை கேட்கின்றனரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

People questioned  political leaders are asking for sacrifices to close the Sterlite plant again

author img

By

Published : Apr 29, 2021, 6:03 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள விவகாரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, தூத்துக்குடியில் தினம் தினம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை இன்று(ஏப்.29) சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பணியைத் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர்கள், "உலகத்திலேயே வாழும் உயிர் சூழலுக்காக 15 உயிர்களை பலி கொடுத்த ஊர் என்றால் அது தூத்துக்குடி.

எனவே 15 பேரின் உயிர் தியாகத்தால் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்தி எனும் பெயரில் திறப்பதற்கு அனுமதி அளித்ததை நயவஞ்சகச் செயலாக கருதுகிறோம்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இன்று வரையில் சரியான நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று சென்னையில் இருந்து கொண்டு அனைத்து கட்சியினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உண்மையில், அவர்கள் தூத்துக்குடி மக்களின் விருப்பங்களைத் தெரிந்து அதை செய்யவில்லை. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி தொடங்கக்கூடாது என்பதை நாங்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.

ஒருவேளை தூத்துக்குடியில் மேலும் அதிக உயிர் பலிகளைக் கொடுத்து தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட நினைகிறார்களா என சந்தேகிக்கிறோம். மக்களின் விருப்பங்களுக்கு எதிராக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.

அனுமதித்தால் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். தற்போது நடைபெறுவது முதற்கட்ட போராட்டம்தான். இனி அடுத்தடுத்த கட்டங்களாகப் போராட்டம் விரிவடையும்" என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.