ETV Bharat / state

தூத்துக்குடி: 4 நாட்களாக நீடித்த மின் தடை.. மக்கள் சாலை மறியல்

நான்கு நாட்களாக மின்சாரம் கட் ஆனதை கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கு எதிராக ஒட்டப்பிடாரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நான்கு நாட்களாக நீடித்த மின் தடை..! ; அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் சாலை மறியல்

author img

By

Published : Nov 9, 2022, 9:06 PM IST

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடந்த நான்கு நாட்களாக டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படவில்லை என்பதால், அந்த கிராமம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் மின்சாரத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வந்ததால், இதனைக்கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசனத்து சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரான்ஸ்பார்ம் அடிக்கடி பழுது ஏற்படுவது மட்டுமின்றி, சில நேரங்களில் உயர் மின்சாரம் வந்து டிவி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்களும் வெடித்து சேதமடையும் சூழ்நிலையும் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பசுவந்தனை மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மின்சாரம் விரைந்து வழங்குவது மட்டுமின்றி புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி: 4 நாட்களாக நீடித்த மின் தடை.. மக்கள் சாலை மறியல்

அதிகாரிகளின் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை இலவசமாக வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.