தூத்துக்குடி மாவட்டம் முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் வெற்றிவேல். தீவிர திமுக தொண்டரான இவருக்கு சமீபத்தில் 100ஆவது பிறந்த நாள், 50ஆவது திருமண நாள் ஆகிய நிகழ்ச்சிகளை குடும்பத்தினர் கொண்டாடினர்.
இது குறித்து தகவல் அறிந்த திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி அவரது இல்லத்திற்கு சென்று கேக் வெட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திடீரென எம்பி கனிமொழி இல்லம் தேடி வந்து வாழ்த்தியதை கண்டு வெற்றிவேல் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: எம்.பி. கனிமொழி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்!