ETV Bharat / state

விஜயகாந்த் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரும் இழப்பு - கனிமொழி எம்பி

Captain Vijayakanth: எந்த உயரத்தில் இருந்தாலும் தான் ஒரு சாமானிய மனிதன் என்பதை, எந்த காலத்திலும் மறக்காத மாமனிதர் என மறைந்த விஜயகாந்த் குறித்து தூத்துக்குடி கனிமொழி எம்பி வருத்தம் தெரிவித்துள்ளார்.

thoothukudi mp kanimozhi talks about vijayakanth
விஜயகாந்த் குறித்து எம்.பி கனிமொழி பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 1:54 PM IST

விஜயகாந்த் குறித்து எம்.பி கனிமொழி பேச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (டிச.29) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் அவர்களின் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டும் அல்லாமல், அவரைத் தெரிந்த எல்லோருக்குமே பெரிய இழப்பு.

எந்த உயரத்தில் இருந்தாலும், தான் ஒரு சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத ஒரு மாமனிதர் அவர். எப்போதும் மக்கள் மீதும், எளியவர்கள் மீது அக்கறையுடன் இருப்பார். தனக்கு ஒரு காலகட்டத்தில் உதவியவர்களை எந்த காலத்திலும் மறக்காதவர், அவர்களோடு உறுதுணையாக நிற்கக்கூடிய மனிதர் தான், 'புரட்சிக் கலைஞர்' விஜயகாந்த்.

அவரது அரசியல் பயணம் என்பது மக்கள் மீது அக்கறை கொண்ட பயணம். அவர் நடித்த திரைப்படங்கள் கூட சமூக உணர்வு, திராவிட உணர்வு, மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு என்ற மையக்கருத்தைத் தான், திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. அவரது வாழ்க்கையும், தமிழ் இனம் என்பதைத் தான் பற்றிக்கொண்டு இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், அவரை நாம் இப்போது இழந்து இருக்கிறோம். அவரோடு பழகக்கூடிய வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது. தலைவர் கருணாநிதி மீதும், என்னுடைய தயார் மீதும் மாறாத பற்று வைத்திருக்கக்கூடிய, நல்ல நண்பர். அவருடைய இழப்பு என்பது தனிப்பட்ட முறையில், எனக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்' என மனம் வருந்தினார்.

மேலும் பேசிய அவர், 'வேலைத் தேடிவரும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் தன்னுடைய அலுவலகத்தில் வேலை கொடுத்துவிடுவார். அப்படி, கிட்டத்தட்ட 75 பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுக்கக்கூடிய அளவுக்கு இளகிய மனதுக்கு சொந்தக்காரர் அவர். அவருடைய இழப்பு என்பது, அவரை தெரிந்த அத்தனை பேருக்கும் ஒரு பெரிய இடியாகத்தான் இருக்கும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: "நடிப்பின் இலக்கணம் நண்பர் விஜயகாந்த்" - நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு கண்ணீர் சிந்திய ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.