ETV Bharat / state

திமுகவிற்கு மக்களை சந்திக்கின்ற சக்தி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு - Minister Kadampur Raju Press Meet In Thoothukudi

தூத்துக்குடி: திமுக கட்சி கார்ப்பரேட் கம்பெனி மூலம் இயக்கப்பட்டு வருகிறது. திமுகவிற்கு மக்களை சந்திக்கின்ற சக்தி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு  அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு  தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு  Minister Kadampur Raju  Minister Kadampur Raju Press Meet In Thoothukudi  Minister Kadampur Raju Press Meet
Minister Kadampur Raju Press Meet
author img

By

Published : Feb 10, 2021, 11:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கம்மாப்பட்டி, திருமங்கலக்குறிச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

இதையடுத்து, வெள்ளாளங்கோட்டையில் ரூ.33 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டுதல், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இதேபோன்று ரூ.14.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தார். ரூ.9.04 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் தொடக்கி வைத்து, ஆவுடையம்மாள்புரம், ராமநாதபுரம் பட்டியூர் அம்மா நகரும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாச்சியர் பாஸ்கரன், அலுவலர் சுபாஷினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோ பாலாஜி, அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மற்ற தலைவர்களை போல் செட்அப் செய்வது கிடையாது. இது ரீல் இல்லை ரியல் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அவர்கள் பரப்புரை ரீலாக உள்ளது. முதலமைச்சரின் பரப்புரை ரியலாக இருக்கிறது.

திமுக சுயமாக சிந்திப்பது இல்லை. பிரஷாந்த் கிஷோர் திமுகவை இயக்குகிறார். அவர்களுக்கு மக்களை சந்திக்கின்ற சக்தி இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது கட்சியினரை சந்திப்பது கிடையாது. ஆனால், முதலமைச்சர் அப்படி அல்ல. சாதாரண தொண்டர்களும் அவரை எளிதாக சந்திக்கலாம். அது தான் மக்கள் இயக்கம்.

இது தான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள வேறுபாடு. எங்களை யாரும் இயக்க முடியாது. பாஜக இயக்குகிறது என எங்களை அவர் கூறுகிறார். உண்மையில் இப்போது யார் யாரை இயக்குகிறார்கள் என்பது புரியும். எதிர்கட்சியாக இருக்கும்போதே அவர்களை இயக்க ஆள் தேவை. நாங்கள் ஆளும் பொறுப்பில் சுயமாக இயங்குகின்றோம்.

மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம். அதனால் தான் மத்திய அரசு மூலம் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. இதுவரை 640 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு வாங்கி கொடுத்துள்ளோம். வரி விதிப்பையும் குறைத்து பெற்றுத் தந்துள்ளோம். இதற்காக பாஜகவின் அடிமை ஆட்சி என அவர் கூறுகிறார். கொள்கை வேறு, அரசு இணக்கம் என்பது வேறு.

இவர்களை இயக்குவது தான் ஒரு நிறுவனம் அது இன்று வெட்டவெளிச்சமாகி விட்டது. இப்படி தேர்தல் பரப்புரை அமைத்து கொடுத்தது நல்லது தான். எங்களுக்கு பாஸிட்டிவாக உள்ளது. அவர்களுக்கு நெகட்டிவாக உள்ளது. மு.க.ஸ்டாலின் இன்னும் ஒருமுறை தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கு வந்தார் என்றால், 10 விழுக்காடு வாக்குகள் எங்களுக்கு அதிகரிக்கும். மக்களை நம்பி மட்டுமே முதலமைச்சர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவதால் அவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தனிப்பெருபான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட மாட்டோம் என கடிதம் கொடுத்தால் மட்டுமே திரைப்படங்களை திரையிடுவோம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது.

ஓ.டி.டி. என்பது நகரத்தில் உள்ளவர்களுக்கு சரியாக இருக்கும். ஆனாலும் அது நல்லதல்ல. முதல் வெளியீடாக திரையரங்குகளிலும், ஒரு காலகெடு நிர்ணயித்து கொண்டு 2ஆவது வெளியீடாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிடலாம். எனவே, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. திமுகவில் அவருக்கு மரியாதையும் இல்லை. சட்டப்பேரவையில் ஒரு கருத்தை கூட அவரால் சொல்ல முடியவில்லை. திமுகவில் பொதுவாக கட்டுப்பாடு உள்ளவர்கள் அல்ல. அண்ணாவுடைய திமுக இன்று கிடையாது. அது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை கூட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்க மாட்டார்கள்.

தேர்தல் பயத்தில் முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது யாராக இருந்தாலும் காவல்துறை தனது கடமையை செய்யும். இதுபோன்ற வன்முறைகளுக்கு அஞ்சுபவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், வன்முறையை கையில் எடுத்தால் அது அவர்களுக்கே திரும்பும் என்பது எங்களது கருத்து" என்றார்.

இதையும் படிங்க: 'ரியல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.