தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார்.
பின்னது அவர் பேசுகையில், ''குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி தாய்மார்களுக்கு தெரியும். பள்ளிக்கு செல்லுவதற்கு தயார்படுத்தும் மழலையர்களை உருவாக்குவதற்கு நடத்தப்படும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல. அதற்கு பொறுமை, சகிப்புத்தன்மையோடு சேர்த்து தாய் உள்ளமும் வேண்டும். அவ்வாறு இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
கோவில்பட்டிக்கு தொழில் பயிற்சி கல்லூரியாக நர்சிங் கல்லூரி 18 கோடி ரூபாய் செலவில் விரைவில் கட்டப்படவுள்ளது. வளர்ந்து வரும் நகரமாக இருக்கும் கோவில்பட்டி விரைவில் மாநகராட்சி அந்தஸ்தை கூட பெற முடியும்'' என்றார்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து உண்டியலை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்